search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் கம்பிர்"

    இந்திய அணியின் 4-வது வீரர் வரிசைக்கு இவர் தான் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று கூறுவது கடினம். ஏனென்றால் போட்டி முறை சுவாரசியமாக இருக்கிறது. அனைத்து அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. இதுதான் உண்மையான சாம்பியனை நிர்ணயம் செய்யும்.

    தொடக்கத்தில் சிறப்பாக ஆடாவிட்டால் அதில் இருந்து மீண்டு முன்னேறி வருவது சவாலானது. இந்திய அணியை பொறுத்தவரை அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    கேப்டன் விராட்கோலி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோர் உலக கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    4-வது வீரர் வரிசைக்கு லோகேஷ் ராகுல் தான் பொறுத்தமானவர். ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் தினேஷ் கார்த்திக் சிறந்தவர். ஆனாலும் அவர் 6 அல்லது 7-வது வரிசைக்குத்தான் தகுதியானவர்.

    லோகேஷ் ராகுல்

    பும்ரா, முகமது சமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் மேலும் பக்கபலமாக இன்னொரு வேகப்பந்து வீரர் தேவை என்றே கருதுகிறேன்.

    ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்றாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை.

    இவ்வாறு காம்பிர் கூறினார்.
    ×